தமிழ் 'டப்பிங்'- ல்' 15- ந்தேதி வெளியாகும் 'பிரேமலு'

மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றதுஉலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது
தமிழ் 'டப்பிங்'- ல்' 15- ந்தேதி வெளியாகும் 'பிரேமலு'
Published on: 

மலையாள மொழியில் தயாராகி வெளியான படம் 'பிரேமலு'.இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் நடித்து உள்ளனர்.

இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது.

இந்த படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ்,ஹாட் ஸ்டார், வாங்கியது. பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த படம் தெலுங்கு மொழியில் 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மொழியிலும் இப்படத்தை 'டப்பிங்' செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது வருகிற 15- ந்தேதி அன்று தமிழில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் இணையதளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com