search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nandha"

    கிரிஷ் இயக்கத்தில் நந்தா - ஈடன் குரைக்கோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ழகரம் படத்தின் விமர்சனம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse
    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் காதலிக்கிறார்கள். கருத்து வேறுபாட்டால் சிலகாலம் இவர்கள் பிரிந்து இருக்க, தொல்பொள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா இறந்துவிடுகிறார். 

    இந்த நிலையில், நந்தாவை சந்திக்க வரும் பெரியவர், நந்தாவிடம் அவரது தாத்தாவின் இறப்பு இயற்கையானதில்லை என்றும், மர்ம கும்பல் ஒன்று அவரது தாத்தாவை கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார். நந்தாவின் தாத்தா தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை அவர் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். மேலும் அந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான தடயங்கள், வழித்தடங்கள் அவருக்கு மட்டும் தெரியும் என்றும் கூறுகிறார்.



    இதற்கிடையே நந்தாவின் அப்பா, அவரது தாத்தா பரிசாக கொடுத்ததாக ஒரு பொருளை கொடுக்கிறார். அதனை பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பகடைக்காய் சில குறியீடுகளுடன் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வதென்று புரியாத நந்தா, தனது நண்பர்களின் துணையோடு அது பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். மேலும் அந்த புதையல் இருக்கும் இடத்தையும் தேடி வருகிறார்.

    இந்த நிலையில், அந்த புதையலை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நந்தாவின் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மர்ம கும்பல் ஒன்று மிரட்டுகிறது.



    கடைசியில், நந்தா புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? தனது காதலியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

    நந்தா தனது தாத்தா விட்ட பணியை தொடர வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். ஈடன் குரைக்கோஸ் அழகு பதுமையாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    உணவு தரக்கூடிய பொருள் தான் உலகத்திலேயே பெரிய பொக்கிஷம் என்ற கருவை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியருக்கிறார் கிரிஷ். அத்துடன் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழியின் பெருமையை படத்தில் காட்டியிருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் பாராட்டும்படியாக உருவாக்க்கியிருக்கிறார்கள்.

    தரண்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம். பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `ழகரம்' உணவின் முக்கியத்துவம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான சாந்தினியும், நடன இயக்குநரான நந்தாவும் காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணம் டிசம்பர் 12ந் தேதி நடைபெறவிருக்கிறது. #ChandiniTamilarasan #Nandha
    பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின.

    மேலும் அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயசதார்த்தம் நடந்து முடிந்தது.

    வருகிற 12ந் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர்.



    அதனைத்தொடர்ந்து 16ந் தேதி சென்னையில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    திருமணம் குறித்து சாந்தினி கூறியிருப்பதாவது,

    நந்தாவும் நானும் 9 வருடங்களாக காதலித்து வந்தோம். சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்தோம். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். #ChandiniTamilarasan #Nandha

    ×