என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நதிகள்"

    • இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்
    • இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.

    பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபுர்கண்டி அணைத் திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.

    இதன் மூலம், ரவி நதியிலிருந்து பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த உபரி நீர், இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக நிறுத்தப்படும்.

    ஷாபுர்கண்டி அணைத் கட்டுமானம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அறிவித்துள்ளார்.

    "இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்" என்று அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.

    இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களில் உள்ள 32,173 ஹெக்டேர் வறண்ட நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்படும்.

    மேலும், பஞ்சாபில் உள்ள 5,000 ஹெக்டேர் நிலங்களும் பலன் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் 206 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  

    1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, ரவி நதியின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.

    இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் தடைபட்டிருந்த இந்தப் பணி, 2018ல் மத்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு வேகம் எடுத்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும் செனாப் நதியின் குறுகியும் நீர் மின் நிலையத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

    • நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.
    • தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் நம் முன்னோர்கள் மிகுந்த மரியாதை கொடுத்தனர்.

    நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.

    தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளை மையமாக வைத்தே எல்லா விழாக்களையும் அமைத்தனர்.

    ''நீரின்றி அமையாது உலகு'' என்பதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நதிகள், நீர்நிலைகளில் நீராடுவது மிகுந்த பலன் தரும் என்று நம்பினார்கள்.

    அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் போன்ற விழாக்களில் தீர்த்தமாடினால் மூன்று பிறவிகளின் பாவம் அகன்று விடும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் குடந்தையில் நீராட குலம் தழைக்கும் என்றனர்.

    சிறப்பு வாய்ந்த குடந்தை மகாமகம் குளத்தில் நீராடினால் அந்த பலனை பெற முடியும்.

    • புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.
    • முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    தன்னை நோக்கி தவம் செய்த நவக்கிரக குருவுக்கு அருள் செய்ய நினைத்த பிரம்மன்,

    தன் கமண்டலத்திலிருந்து வந்த புஷ்கர கங்கையைப் பார்த்து, "நீ குருவுடன் சென்றுவிடு" என்று கட்டளையிட்டார்.

    புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.

    அதோடு குருவுடன் செல்ல கங்கைக்கு விருப்பமும் இல்லை.

    இதையடுத்து பிரம்மன், கங்கை, குரு ஆகிய மூவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு உறுதியானது.

    குரு ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார்.

    ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நதியில் புஷ்கர கங்கை தோன்றி

    குருவுக்கு காட்சி தர வேண்டும் என்ற உடன்படிக்கை ஏற்பட்டது.

    அதற்கு புஷ்கர கங்கை ஒப்புக்கொண்டது.

    இந்த ஏற்பாட்டின்படி,

    குரு மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் கங்கையிலும்,

    குரு ரிஷப ராசியில் இருக்கும் வைகாசி மாதத்தில் நர்மதையிலும்,

    குரு மிதுன ராசியில் இருக்கும் ஆனி மாதத்தில் சரஸ்வதியிலும்,

    குரு கடக ராசியில் இருக்கும் ஆடி மாதத்தில் யமுனையிலும்,

    குரு சிம்ம ராசியில் இருக்கும் ஆவணி மாதத்தில் கோதாவரியிலும்,

    குரு கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணாவிலும்,

    குரு துலாம் ராசியில் இருக்கும் ஐப்பசி மாதத்தில் காவிரியிலும்,

    குரு விருச்சிக ராசியில் இருக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியிலும்,

    குரு தனுசு ராசியில் இருக்கும் மார்கழி மாதத்தில் சிந்துவிலும்,

    குரு மகர ராசியில் இருக்கும் தை மாதத்தில் துங்கபத்ராவிலும்,

    குரு கும்ப ராசியில் இருக்கும் மாசி மாதத்தில் பிரம்மபுத்ராவிலும்,

    குரு மீன ராசியில் இருக்கும் பங்குனி மாதத்தில் பிரநீதாவிலும்,

    புனித நீராடலுக்கு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நாட்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    • தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே உள்ளது.
    • இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.

    அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது.

    அர்ஜென்டினாவிற்கும் உருகுவேவிற்கும் இடையிலான ஒரு முக்கிய நீர்நிலையான ரியோ டி லா பிளாட்டா நதியின் துணை நதியான இது பல கிலோமீட்டர் தூரம் பயணித்து கடைசியில் ஆற்றில் கலக்கும். பயணிக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.

    அங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதற்கு முன்னரும் எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்திலும் இந்த நீர்நிலை மாறியுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    ஓடை நிறம் மாறியது குறித்து பேசிய உள்ளுரர்வாசிகள், திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல நீரோடை நிறம் மாறியிருந்தது. அது இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர்.

    இந்த நீரோடையை தவிர்த்து இந்தப் பகுதியில் உள்ள ஆறுகள் பலவும் மாசுபாடுகள் நிறைந்தவை. உதாரணமாக மடான்சா-ரியாசுலோ நதிப் படுகை, லத்தீன் அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.

    ×