சிறுவர் கால்பந்து போட்டி

காரைக்குடி அருகே சிறுவர் கால்பந்து போட்டியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார் . பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
சிறுவர் கால்பந்து போட்டி
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி ஆரோகிக் அகாடமி முதலிடத்தையும், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர். அகாடமி 2-ம் இடத்தையும், கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி3-ம் இடத்தையும் வென்றன. 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அப்பாஸ் மெமோரியல் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ம் இடத்தையும், ஒய்.பி.ஆர். அணி 3-ம் இடத்தையும் வென்றன.

போட்டிகளை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவருமான கே.ஆர்.ஆனந்த் மற்றும் பலர் தொடங்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com