search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Football Tournament"

    • 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
    • நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.

    சென்னை:

    லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மர்பி நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 23-வது கல்லூரிகள் கால்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் லயோலா, எம்.சி.சி, செயிண்ட் ஜோசப் ( திருச்சி), அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி , ஜாமியா நத்விய்யா கல்லூரி ( கேரளா) உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2-வது , 3-வது, 4-வது இடங்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்யராஜ், விைளயாட்டு குழு தலைவர் எம்.எஸ்.ஜோசப் அந்தோணி, உடற் கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழக இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தா ட்ட போட்டி நடைபெற்றது.
    • இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை ப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழக இயேசு சபை பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தா ட்ட போட்டி நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்க துணை தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார். சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லூர்து சேவியர் கலந்து கொண்டார்.

    போட்டியை மணிகண்டன் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் இயக்குனர் ஜோசேவியர், அருட்தந்தை பாஸ்டின், துணை தலைவர் பெஞ்சமின் ஆேராக்கியம், துணை தலைமை ஆசிரியர் மரியலூயிஸ், ஆசிரியர்கள் மரிய ராஜேந்திரன், டேமியன் ஈசாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    • கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகாகவி பாரதியார் கோப்பைக்கான மாநில கால்பந்துப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வி.டி.எஸ்.ஆர். ரகுமான்கான் வழங்கினார்.

    கடையம்:

    கடையம் கால்பந்து கழகம் மற்றும் தென்காசி வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸ் சார்பாக கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகாகவி பாரதியார் கோப்பைக்கான மாநில கால்பந்துப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    2-ம் இடத்தை விராலிமலை எம்.எம்.எப். சி. அணியும், 3-ம் இடத்தை நாகர்கோவில் ஏ.எஸ்.எப்.சி. அணியும், 4-ம் இடத்தை கடையம் கால்பந்து கழகமும் பெற்றது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சத்திரம் தொடக்கப்பள்ளி செயலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வி.டி.எஸ்.ஆர். ரகுமான்கான் வழங்கினார்.

    முதல் பரிசு ரூ. 15,001 திண்டுக்கல் அணிக்கு ஜெப பிரவின் சார்பாக கடையம் அருணாசலம் வழங்கினார். 2-ம் பரிசு ரூ. 10,001 விராலிமலை அணிக்கு நடராஜ் அகாடமி சார்பாக வழங்கினார், 3-ம் பரிசு ரூ. 7,001 நாகர்கோவில் அணிக்கு கோபிநாத் பிரபு சார்பாக வேல்முருகன் வழங்கினார். 4-ம் பரிசு ரூ. 5,001 கடையம் அணிக்கு மெரிபால் சார்பாக ரவி வழங்கினார்

    சிறந்த வீரர்களாக கடையம் வள்ளிகுட்டி, சின்னதம்பி ஸ்ரீதர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டிக்கான ஏற்பாடுக்களை கால்பந்து கழகத் தலைவர் மெரிபால், செயலாளர் கிறித்துதாஸ், பொருளாளர் ஜெயராஜ், துணைத்தலைவர்கள் ஸ்டியன், தாமஸ், கருணாகரன், இசக்கி நாரயணன், இணைச் செயலாளர்கள் கிங்ஸ்ஸி, நதின் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் கண்ணன், பழனிசாமி, ராஜேஷ், மாரிசெல்வம், வினோத் மற்றும் உறுப்பினார்கள் செய்திந்தனர்.

    • கால்பந்தாட்ட போட்டி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.
    • இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் முதன்முறையாக தென் மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆன எழுவர் கால்பந்தாட்ட போட்டி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.

    இந்த எழுவர் கால்பந்தாட்ட போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் முன்னிலை வகித்தார்.

    இந்த போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக தாகூர் கலைக் கல்லூரி வளாகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுவை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானையின் நினைவாக மரக்கன்று நட்டார். கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை தாகூர் கலைக் கல்லூரி உடற்கல்வி துறை மேற்கொண்டு உள்ளனர்.

    • சிறப்பு விருந்தினராக செய்யது நவாஸ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கல்லூரி களுக்கு இடையேயான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

    கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் நிறைவு நாளான நேற்று நெல்லை மாவட்ட செய்யது குழுமங்களின் நிர்வாக இயக்குனர் செய்யது நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    கால்பந்து போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி முதல் இடத்தைப் பிடித்து சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை வீரர்கள் அணி 2-வது இடத்தை பிடித்து சுழற்கோப்பையினை கைப்பற்றியது.

    இதே போல் கைப்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், சிவகங்கை மாவட்ட சாஹிர் ஹுசைன் கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் தலைவர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

    முன்னதாக உடற்கல்வி யியல் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் பேச்சி முத்து நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் விரிவுரை யாளர்கள் செய்திருந்தினர்.

    • தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி சாகுபுரம் மைதா னத்தில் 4 நாட்கள் நடை பெற்றது.
    • டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி சாகுபுரம் மைதா னத்தில் 4 நாட்கள் நடை பெற்றது. டி.சி.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ் பிரிவு மற்றும் அலிமாமா புட்சால் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் 5-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் பல்வேறு இடங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் மற்றும் லீக் முறையிலான போட்டியை டி.சி.டபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    இறுதிப் போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணியும், காயல்பட்டினம் ஏ ஸ்குவாடு அணியும் மோதின.இதில் இடைவேளைக்கு பிறகு காயல்பட்டினம் அணி வீரர் அமீன் ஒரு கோல் அடித்தார்.தூத்துக்குடி அணி கடைசி வரையில் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பிலான ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது. 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி அணி பரிசு கோப்பை மற்றும் சென்னை தொழிலதிபர் மண்ணடி ரபி சார்பிலான ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது.சிறந்த வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், சுற்றிப்போட்டி குழு நிர்வாகிகள் முகமது அலி, சுல்தான், இம்ரான், பைசல் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது ஆண்கள் பிரிவில் பெரியபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள், 14, 17 வயது பெண்கள் பிரிவில் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன.

    இந்த அணிகள் நாமக்கலில் டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்து கொள்கின்றன. 19 வயது பிரிவு ஆடவர் பிரிவில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற பனைக்குளம் பகுர் தீன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஜமாஅத் தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம் (மேற்கு), ஹம்சத் அலி (கிழக்கு) மற்றும் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ரவி, உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

    • பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.
    • நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

    சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

    இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவி பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது.

    மேலும், பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.

    பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்.

    முதலமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

    இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
    • கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளி–களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சாகுபுரத்தில் தொடங்கியது.

    நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.

    இதில் கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    முதல் போட்டியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

    நிகழ்ச்சியில் சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் அனு ராதா. தலைமையாசிரியை சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன், டி.சி.டபிள்யூ. மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த ஒயிட்பீல்டு மற்றும் விஜய், கணபதி, திருவேங்கடத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போபாலில் ஏழுவர் விளையாடும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏழுவர் விளையாடும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், மணிப்பூர் உள்பட 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு அணிக்கும், மத்திய பிரதேச அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அணி வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தை பிடித்தது.தமிழ்–நாடு, ஆந்–திரா பேரில் 8 சிறுவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேசிய அளவில் சிறந்த கோல் கீப்பர் பட்டத்தை திருப்பூர் வீரர் முகுந்தன் ஆதித்யா வென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை திருப்பூர் வந்த வீரர்களுக்கு பல்வேறு கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அகில இந்திய ஏழுவர் கால்பந்து கழக மாநில செயலாளர் ஹரிகரசுதன், துணை செயலாளர் திவ்யபாரதி, வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
    • தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

    ௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன. 

    • நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தென்காசியில் நடந்தது.
    • தென்காசி மாவட்ட அளவில் 14 அணிகள் பங்கேற்றன.

    வீ. கே. புதூர்:

    தென்காசி கால்பந்து கழகம் மற்றும் வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸ் இணைந்து நடத்திய சுசில் பிஸ்வாஸ் நினைவு கோப்பை நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தென்காசியில் நடந்தது.

    தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிக்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் இசக்கித்துரை தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் சாதிர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் காமேஷ் வரவேற்றார்.

    இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர்கள் ரஹ்மான், செய்யது அலி பாதுஷா வாழ்த்தி பேசினர். போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 14 அணிகள் பங்கேற்றன.

    இதில் முதல் பரிசை ரெட்டியார்பட்டி கால்பந்து அணியும், இரண்டாம் பரிசை ஆலங்குளம் அசுரா கால்பந்து அணியும், மூன்றாம் பரிசை தென்காசி கால்பந்து அணியும், நான்காம் பரிசு ஆலங்குளம் கால்பந்து அணியும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை விடிஎஸ்ஆர் சில்க்ஸ் இம்ரான்கான், நகர்மன்றத் தலைவர் சாதிர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஜேபி கல்லூரி விளையாட்டு அலுவலர் மனோகரன் சாமுவேல் ஆகியோர் வழங்கினர்.

    போட்டியில் தென்காசி கால்பந்து கழக பொருளாளர் இசக்கிராஜ், விஜயகுமார், இசக்கிபாண்டி, ஜோதி, கார்த்திக், திமுக நிர்வாகிகள் ஷேக்பரீத், இலக்கிய அணி ராமராஜ், வக்கீல் ரகுமான் சதாத், இளைஞரணி வெங்கடேஷ், இசக்கிமுத்து, முருகேசன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி கால்பந்து கழக தலைவர் சிதம்பரம் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்து கழக செயலாளரும், பயிற்சியாளருமான டாக்டர் பிஸ்வாஸ் செய்திருந்தார்.

    ×