search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி முதலிடம்
    X

    கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணியினரை படத்தில் காணலாம்.

    நெல்லை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி முதலிடம்

    • சிறப்பு விருந்தினராக செய்யது நவாஸ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கல்லூரி களுக்கு இடையேயான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

    கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் நிறைவு நாளான நேற்று நெல்லை மாவட்ட செய்யது குழுமங்களின் நிர்வாக இயக்குனர் செய்யது நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    கால்பந்து போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி முதல் இடத்தைப் பிடித்து சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை வீரர்கள் அணி 2-வது இடத்தை பிடித்து சுழற்கோப்பையினை கைப்பற்றியது.

    இதே போல் கைப்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், சிவகங்கை மாவட்ட சாஹிர் ஹுசைன் கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் தலைவர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

    முன்னதாக உடற்கல்வி யியல் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் பேச்சி முத்து நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் விரிவுரை யாளர்கள் செய்திருந்தினர்.

    Next Story
    ×