search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் நடந்த மாநில கால்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி  முதலிடம்
    X

    கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளை படத்தில் காணலாம்.

    கடையத்தில் நடந்த மாநில கால்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம்

    • கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகாகவி பாரதியார் கோப்பைக்கான மாநில கால்பந்துப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வி.டி.எஸ்.ஆர். ரகுமான்கான் வழங்கினார்.

    கடையம்:

    கடையம் கால்பந்து கழகம் மற்றும் தென்காசி வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸ் சார்பாக கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகாகவி பாரதியார் கோப்பைக்கான மாநில கால்பந்துப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    2-ம் இடத்தை விராலிமலை எம்.எம்.எப். சி. அணியும், 3-ம் இடத்தை நாகர்கோவில் ஏ.எஸ்.எப்.சி. அணியும், 4-ம் இடத்தை கடையம் கால்பந்து கழகமும் பெற்றது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சத்திரம் தொடக்கப்பள்ளி செயலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வி.டி.எஸ்.ஆர். ரகுமான்கான் வழங்கினார்.

    முதல் பரிசு ரூ. 15,001 திண்டுக்கல் அணிக்கு ஜெப பிரவின் சார்பாக கடையம் அருணாசலம் வழங்கினார். 2-ம் பரிசு ரூ. 10,001 விராலிமலை அணிக்கு நடராஜ் அகாடமி சார்பாக வழங்கினார், 3-ம் பரிசு ரூ. 7,001 நாகர்கோவில் அணிக்கு கோபிநாத் பிரபு சார்பாக வேல்முருகன் வழங்கினார். 4-ம் பரிசு ரூ. 5,001 கடையம் அணிக்கு மெரிபால் சார்பாக ரவி வழங்கினார்

    சிறந்த வீரர்களாக கடையம் வள்ளிகுட்டி, சின்னதம்பி ஸ்ரீதர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டிக்கான ஏற்பாடுக்களை கால்பந்து கழகத் தலைவர் மெரிபால், செயலாளர் கிறித்துதாஸ், பொருளாளர் ஜெயராஜ், துணைத்தலைவர்கள் ஸ்டியன், தாமஸ், கருணாகரன், இசக்கி நாரயணன், இணைச் செயலாளர்கள் கிங்ஸ்ஸி, நதின் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் கண்ணன், பழனிசாமி, ராஜேஷ், மாரிசெல்வம், வினோத் மற்றும் உறுப்பினார்கள் செய்திந்தனர்.

    Next Story
    ×