search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCW Company Officer"

    • தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி சாகுபுரம் மைதா னத்தில் 4 நாட்கள் நடை பெற்றது.
    • டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி சாகுபுரம் மைதா னத்தில் 4 நாட்கள் நடை பெற்றது. டி.சி.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ் பிரிவு மற்றும் அலிமாமா புட்சால் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் 5-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் பல்வேறு இடங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் மற்றும் லீக் முறையிலான போட்டியை டி.சி.டபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    இறுதிப் போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணியும், காயல்பட்டினம் ஏ ஸ்குவாடு அணியும் மோதின.இதில் இடைவேளைக்கு பிறகு காயல்பட்டினம் அணி வீரர் அமீன் ஒரு கோல் அடித்தார்.தூத்துக்குடி அணி கடைசி வரையில் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பிலான ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது. 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி அணி பரிசு கோப்பை மற்றும் சென்னை தொழிலதிபர் மண்ணடி ரபி சார்பிலான ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது.சிறந்த வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், சுற்றிப்போட்டி குழு நிர்வாகிகள் முகமது அலி, சுல்தான், இம்ரான், பைசல் உள்பட பலர் செய்திருந்தனர்.

    ×