என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fighter plane"

    • C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
    • விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    அஜர்பைஜான்-ஜார்ஜியா எல்லைக்கு அருகே துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.

    துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில், C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது. 

    ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் அந்த விமானத்தில் இருந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜார்ஜியா அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

    விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் நேற்று வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.

    இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் சிகிக்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்தது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய வங்காளதேச விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.

    • திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி விமானங்கள் தாழ்வாக பறப்பது வாடிக்கையாக உள்ளது.
    • விமானம் தங்கள் ஊரில் வட்டமடித்து செல்வதை கிராமமக்கள் ஆச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி விமானங்கள் தாழ்வாக பறப்பது வாடிக்கையாக உள்ளது. அதிலும் போர் விமானங்கள் போன்றவை நகரில் செல்லும்போது பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    அதேபோல வடமதுரை, கொம்பேறிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலையில் தாழ்வாக பறந்த போர்விமானம் கிராமமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

    அது உண்மையிலேயே போர் விமானமா என தெரியாத நிலையில் வான்வெளியில் இருந்தபடியே சாகசம் செய்தபடி சுற்றிச்சுற்றி வந்தது. இதனால் அதுபோர் விமானமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மக்களை பார்த்து கையசைத்ததும், உற்சாக குரல் எழுப்பியதும் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பல்வேறு ஊர்களில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழலில் இதுபோன்ற விமானம் தங்கள் ஊரில் வட்டமடித்து செல்வதை கிராமமக்கள் ஆச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

    போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். #Congress
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சுமார் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் 12-ந்தேதி நடக்கிறது.

    பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை-குமரிஅனந்தன், யசோதா, செல்வ பெருந்தகை.

    திருவள்ளூர்-டாக்டர் ஜெயக்குமார்.

    திருவண்ணாமலை- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி

    நாமக்கல்-எச்.வசந்த குமார்

    திருப்பூர்-முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

    சிவகங்கை-ப.சிதம்பரம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress
    அமெரிக்காவின் கடும் பொருளாதார தடையையும் மீறி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானத்தை ஈரான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஜனநாயக அரசை நிலைநிறுத்துவதற்காக ஈரான் அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

    பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் மீது ஈரான் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு முன்னர் கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற புரட்சிக்கு முன்னர் ரஷியா மற்றும் அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட போர் விமானங்களைதான் ஈரான் பயன்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய உலக நாடுகள் ஈரானுக்கு போர் ஆயுதங்களையும், விமானங்களையும் விற்க மறுத்து விட்டன. இந்த புறக்கணிப்புக்கு இடையில் ராணுவ பலத்தை அதிகரிக்க ஈரான் சபதம் ஏற்றது. தேவையான போராயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன் அதிநவீன போர் விமானங்களையும் தயாரிக்க கடந்த 2013-ம் ஆண்டில் திட்டம் தீட்டப்பட்டது.

    இந்த திட்டத்தின்படி, தயாரிக்கப்பட்ட ‘கவுசர்’ என்னும் போர் விமானத்தை ஈரான் இன்று சோதனை வெள்ளட்டோத்தின் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்தது. #Iranfighter jet
    ×