என் மலர்
நீங்கள் தேடியது "devika"
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்தது.
- இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், மலேசியாவின் ஜின் வெய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-8 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 6-3 என முன்னிலை பெற்றிருந்தபோது மலேசியா வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் தேவிகா சிஹாத் முதல் முறையாக தாய்லாந்து மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோருக்கு பிறகு சாம்பியன் பட்டம் வெல்லும் 3வது இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், சீனாவின் ஹுவாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேவிகா, மலேசியாவின் ஜின் வெய் உடன் மோதுகிறார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான இஷாராணி பரூக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- 1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார்.
நடிகை குட்டி பத்மினியுடன் சிரித்தபடி அமர்ந்திருப்பவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர். இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் காணம்படும் அவர் வேறு யாருமல்ல நடிகை கனகா தான். சென்னையில் நேற்று முன்தினம் நடிகை குட்டி பத்மினியும் கனகாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அந்த மகிழ்ச்சியில் எடுத்துக்கொண்ட படம்தான் இது.

தேவிகா
கனகாவின் தாயார் தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். 1972-ம் ஆண்டு நடிகர் தேவதாஸ் என்பவருடன் திருமணமாகி அவருக்கு 1973-ம் ஆண்டு பிறந்தவர்தான் கனகா. முதலாளி என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி, சிவாஜியின் கர்ணன் படம் உள்பட குலமகள் ராதை, பலே பாண்டியா, ஜெமினியுடன் சுமைதாங்கி என ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தவர் தேவிகா.
1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார். 2002-ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். அவரது மகளான கனகா 1989-ம் ஆண்டில் ராமராஜனுக்கு ஜோடியாக 'கரகாட்டகாரன்' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கனகா
தொடர்ந்து ரஜினி, சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. கனகா தந்தையுடன் பிரச்சினை, காதல் தோல்வி, சொத்து பிரச்சனை என தொடர்ந்து பல பிரச்சினைகளால் தனிமையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி அவரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்துள்ளார். இருவரும் ஒரு ஹோட்டலில் நீண்ட நேரம் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புகைப்படத்தில் இருப்பது கனகாவா இது? என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.






