என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Winters session"
- மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது. பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதேபோல், மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உணர்வுபூர்வமான விவகாரத்தில் உண்மை என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
- துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்பாக வளரும்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூண் மற்றொன்றின் வரம்புக்குள் ஊடுருவினால் அது ஆட்சி முறையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊடுருவல் அவ்வப்போது நடப்பதைப் பார்க்க முடிகிறது.
மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தேசிய நீதி துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை உச்சநீதிமன்றத்தின் போக்கு கேள்விக்கு உள்ளாக்குகிறது.
ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டபூர்வமாகப்பட்ட அரசமைப்பு பரிந்துரையை நீதித்துறை ரத்து செய்த இந்த சம்பவத்துக்கு நிகராக வேறு எந்த சம்பவமும் இல்லை.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த மசோதா உறக்கத்தில் உள்ளது. இது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்