search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled People's Association"

    • உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடைபெறுகிற அனைத்து உரைகளும், நிகழ்வுகளும் செய்கை மொழியுடன் ஒளிபரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 500 ரூபாய் உதவித்தொகை என்பதை போராடி பெற்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை கேட்டு விண்ணப்பம் 6 என்ற படிவத்தை கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வேலை கேட்டு அந்தந்த மாவட்டங்களில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வருகிற மே மாதம் 9-ந் தேதி மனு கொடுக்க உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×