என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Jitendra Singh"

    • இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
    • மின்தேவை அதிகரிப்பே அணுசக்தி மசோதாவுக்கு காரணம்

    அணுசக்தி மசோதா 2025க்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தபோதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    அணுசக்தி துறைக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அவையில் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா அணுசக்தியை விரிவுபடுத்துதல், தனியார் பங்களிப்பை அனுமதித்தல் மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) அணுசக்தி திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துறை இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே  ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதாமூலம் தனியார் நிறுவனங்கள் அணுசக்தி துறையில் நுழைவதை அனுமதிக்கிறது. 

    மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர்,

    "இந்தியாவில் 60-79% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துகிறோம். மின்தேவை அதிகரிப்பே அணுசக்தி மசோதாவுக்கு காரணம். மேலும் தனியார் பங்களிப்பையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யவே இந்த மசோதா. அணுசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது." எனவும் தெரிவித்துள்ளார். 

    • மே 11-ந் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடும்.
    • தேசிய தொழில்நுட்ப தினத்தின் கருப்பொருளாக ‘அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம்’ இருக்கும்.

    புதுடெல்லி :

    மே 11-ந் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், புவி அறிவியல், விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளின் உயர்மட்ட கூட்டுக்குழு கூட்டம் நடந்தது.

    அதில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டார். தேசிய தொழில்நுட்ப தினத்தை கொண்டாடுதல், அறிவியல் ஊடக தொடர்பு பிரிவை உருவாக்குதல், திட்டங்களில் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனத்துக்கான வயது வரம்பை தளர்த்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேசியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியா அமோக வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட முக்கியமான சீர்திருத்தங்கள்தான் காரணம்.

    இந்த ஆண்டு, அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் மே 11-ந் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடும்.

    தொழில்நுட்ப ஜாம்பவான்கள், ஆராய்ச்சியாளர்கள், என்ஜினீயர்கள் ஆகியோர் படைத்த சாதனைகளை தேசிய தொழில்நுட்ப தினம் எடுத்துச் சொல்லும். தேசிய தொழில்நுட்ப தினத்தின் கருப்பொருளாக 'அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம்' இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.
    • நாடு முழுவதும் 864 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 864 ஐ.பி.எஸ். பணியிடங்களும் காலியாக உள்ளன.

    * நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்காக பஸ்வான் கமிட்டியின் பரிந்துரைகள்படி, சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கடந்த 2012 முதல் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

    * ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நேரடி சேர்க்கை நியமன எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்களவையில் சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள் இவை:-

    * நாட்டில் 21 கோடிக்கும் அதிகமான 2 சக்கர வாகனங்களும், 7 கோடிக்கும் கூடுதலான 4 சக்கர வாகனங்களும் உள்ளன.

    * மொத்த வாகனங்களில், 5 லட்சத்து 44 ஆயிரத்து 643 இருசக்கர வாகனங்களும், 54 ஆயிரத்து 252 நான்கு சக்கர வாகனங்களும் மின்வாகனங்கள் ஆகும். இது கடந்த 3-ந் தேதி நிலவரம் ஆகும்.

    * 2017-20 ஆண்டுகளில் மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 157 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 2017-ல் 1 லட்சத்து 47 ஆயிரத்து 913 பேரும், 2019-ல் 1 லட்சத்து 51 ஆயிரத்து 113 பேரும், 2020-ல் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேரும் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். 2018-ல்தான் அதிகபட்ச எண்ணிக்கையாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் பலியாகி உள்ளனர்.

    இவ்வாறு அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.

    ×