என் மலர்
நீங்கள் தேடியது "Republic Day 2026"
- அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
- விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன்படி, கேரளா மாநிலம் கண்ணூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அப்போது, அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் மேடையில் உரையாற்றினார். அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
சுதாரித்துக்கொண்ட அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், மயங்கிய அமைச்சரை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டனர்.
அமைச்சருக்கு சுயநினைவு வராததை அடுத்து, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் 'வந்தே மாதரம்' பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும்.
விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.
நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.
'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவீதம் பெண்களுடையது என தெரிவித்தார்.
- சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார்.
- உலகப் புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கானப்படுத்தி, அவமதித்து வருகிறார்.
குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் வழங்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
"நாட்டின் குடியரசு தின விழாவையொட்டி, வரவேற்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாக அழைப்பு அனுப்பி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார். வழிவழியாக பேணப்பட்டு வரும் நல் மரபுகளை உடைத்து களங்கப்படுத்துகிறார்.
சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து, இறுதியில் அவை காலவதியாகி விட்டதாக தன்னிச்சையாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகவும், ஒரு முகமாகவும் எதிர்த்து வருகிற புதிய தேசியக் கல்விக் கொள்கையை, ஆளுநர் மாளிகை வழியாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நிர்ப்பந்தித்து வருகிறார்.
அறிவுசார் கருத்துக்களை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார். உலகப் புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கானப்படுத்தி, அவமதித்து வருகிறார். ஆளுநர் என்ற உயர்ந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமற்றவரான ஆர்.என்.ரவியின் அழைப்பையும், அவரது வரவேற்பு விழாவையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
- மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார்.
குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, உளவுப்பிரிவின் ரகசிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அந்தவகையில், குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில அரசுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இரவு நேரத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். தங்கும் விடுதிகளில் யாரேனும் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா நெருங்க நெருங்க போலீசாரின் பாதுகாப்பு கெடுபிடி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.
- சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- இது வரும் ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (ஜனவரி 18) முதல் இந்தச் சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, விமான நிலையத்தின் வெளிப்பகுதி முதல் விமானங்கள் நிற்கும் பகுதி வரை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.
குடியரசு தினத்திற்கு முந்தைய தினங்களான ஜனவரி 24, 25 மற்றும் ஜனவரி 26 ஆகிய மூன்று நாட்களில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, ஏழு அடுக்கு பாதுகாப்பாக உயர்த்தப்படும்.
பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
- அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள் கலந்துகொள்ளும்
- மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறும்.
மத்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, மத்திய ஆயுதப் படைகள், மாநில படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த நிலையில், வருகின்ற ஜன. 26 ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப நாய்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள், அத்துடன் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு வழக்கமான ராணுவ நாய்களும் இடம்பெறும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தற்போது தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் ஒத்திகை நிகழ்வில் இந்த விலங்குகளும், பறவைகளும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.






