அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற வாலிபர் கைது

வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார்.எரிவாயு, முகமூடி, ஹெல்மெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற வாலிபர் கைது
Published on

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தின் மேற்கு பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்தார்.

அவர் பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த வாலிபரை சுற்றி வளைத்தனர். ஆயுதத்தை கீழே போடும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபர் தன்னிடம் வெடி மருந்துகளையும் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், பாராளுமன்ற வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாலிபர் வாகனத்தையும், ஒரு காரையும் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் எரிவாயு, முகமூடி, ஹெல்மெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாலிபர் யார், எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com