என் மலர்
இந்தியா

ஜார்க்கண்ட்: என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
- மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம்
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியாவில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகளை மத்திய பாதுகாப்பு படையி னர் சுட்டு கொன்றனர், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் தலைவன் ஒருவனும் அடங்கும். அவனது தலைக்கு அரசு ரூ.1 கோடி அறிவித்து இருந்தது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






