என் மலர்tooltip icon

    இந்தியா

    வரதட்சணை கொடுமை: மனைவியை கொன்ற கணவனை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் - பெண்ணின் தந்தை கோரிக்கை
    X

    வரதட்சணை கொடுமை: மனைவியை கொன்ற கணவனை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் - பெண்ணின் தந்தை கோரிக்கை

    • நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது.
    • நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கணவர் குடும்பத்தினர் கொளுத்தியுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். விபினின் சசோதரனை அவர் திருமணம் செய்துள்ளார்.

    நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி நிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

    நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் கணவனை கைது செய்தனர். கணவரின் பெற்றோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் உயிரிழந்தது குறித்து பேசிய நிக்கியின் தந்தை, "என் மகளை கொன்றவர்களை என்கவுண்டரில் சுட்டு கொல்ல வேண்டும். அவர்களுடைய வீடு இடிக்கப்பட வேண்டும். உத்தரபிரதேச போலீசார் பிக்பாக்கெட் திருடர்களின் காலில் சுடுவார்கள், இந்தக் கொலைகாரர்களை என்கவுண்டரில் கொல்ல மாட்டார்களா? இது பாஜக அரசு" என்று கோபத்துடன் தெரிவித்தார்.

    Next Story
    ×