என் மலர்tooltip icon

    இந்தியா

    வாரத்தில் 2 நாட்கள் அதிகாரிகள் மக்களை சந்திக்க வேண்டும்: நிதிஷ் குமார் அதிரடி உத்தரவு
    X

    வாரத்தில் 2 நாட்கள் அதிகாரிகள் மக்களை சந்திக்க வேண்டும்: நிதிஷ் குமார் அதிரடி உத்தரவு

    • அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் இருப்பதில்லை.
    • மக்கள் கஷ்டத்தை சந்திக்கக் கூடாத வகையில், அதிகாரிகள் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்களை சந்திக்கும் வகையில் அதிகாரிகள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக பஞ்சாயத்து மற்றும் டிவிசனல் அளவிலான அலுவலங்களில் கட்டாயம் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வருகிற 19-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "கோரிக்கை மனுக்களுடன் அரசு அலுவலங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது, அதிகாரிகள் இருப்பதில்லை என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளக் கூடாது. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

    இந்த சிஸ்டம் பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×