என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை
- கிருத்திகா கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
சிதம்பரம் வல்லம்படுகை ெரயில்வே நிலையம் அருகில் கணேசமூர்த்தி மகள் கிருத்திகா (வயது 19) இவர் கடலூர் கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கிருத்திகா கல்லூரிக்கு சென்று விட்டு பின்னர் சிதம்பரத்தில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்திற்கும் சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது வல்ல ம்படுகை -மயிலாடுதுறை ெரயில் நிலையத்திற்கு உட்பட்ட ெரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று வந்தது. இந்நிலையில் கிருத்திகா வீட்டின் பின்புறம் உள்ள ெரயில் நிலையத்திற்கு வந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மயிலாடுதுறை ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகா உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






