திட்டக்குடி அருகே ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை

சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள்.
திட்டக்குடி அருகே ஓட்டல்  ஊழியர்  அடித்துக்கொலை
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26). இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பெண்ணாடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவரிடம் கூறி சென்றவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் பெண்ணாடத்திலிருந்து தொளார் செல்லும் சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். சரவணனின் முகத்தில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள். சரவணன் உடலை போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதனைக்கான அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com