என் மலர்
நீங்கள் தேடியது "DMK rule"
- பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்றார் தமிழிசை.
- இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை, இதை முதலில் சரி செய்ய வேண்டும்.
எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல், மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்.
இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை.
மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் இன்றும் பயன்படும் கேலரி போன்ற வகுப்பறைகளை அமைத்து ஆசிரியருக்கு தேவையான மேடை அமைத்து தெளிவான நவீன டிஜிட்டல் கல்வி கற்பிக்கும் திரைகளையும் போர்டுகளையும் அமைப்பதன் மூலமே இதை சரி செய்து விடலாம்.
இது போன்ற மாற்றங்களை மாணவர்களின் உளரீதியாக மனரீதியாக வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக காப்பி அடிப்பதை நிறுத்தி ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும் சமீபத்தில் கூட வகுப்பறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு பெல் டைம் என்பதை மணி அடித்து நினைவூட்டும் அரசாணை கையெழுத்திட்ட முன்னாள் புதுச்சேரி ஆளுநர் என்ற முறையில் அதை நான் வரவேற்பதுடன் அதே போன்று நல்ல திட்டங்கள் புதிய கல்விக் கொள்கைகளும் இருக்கின்றன அதை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாகவே நம் மாணவர்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
- மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
அப்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அதிமுக தேர்தல் பரப்புரையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் இந்த ரோடு ஷோவை பார்த்தவுடன் சிலருக்கு ஜூரம் வந்துவிடும்.
மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை. கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது.
2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும். 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜக கட்சி நல்ல கட்சி, நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா?
மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை, எதுவுமே தமிழ் செய்யவில்லை என கீரல் விழுந்த ரெக்கார்டு போல் பேசுகின்றனர்.
16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது?
திமுக மக்களை பற்றி சிந்தித்ததா?, நிதி கொண்டுவந்ததா? இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.
தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.
வரும் தேர்தலில் தீயசக்தியான திமுக-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
- உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.
- விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினின் சாதனை.
இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.
இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது.
- மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.
திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.
திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. ரூ.39,000 கோடி டாஸ்மாக் ஊழல் உள்ளிட்டவற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.
இலவச வேட்டி வழங்குவதிலும் ஊழல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊழல் செய்துள்ளது. மணல் ஊழல், எரிசக்தி ஊழல் என பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்குகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 50-வது ஆண்டு கட்சி நிறுவன தின பொன் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில்நடந் தது.
ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்-மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வருகிற தேர்தலில் ''வேட்டு போடும் திருவிழாவுக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை. அதனால் உங்களுக்கு இல்லை ஒட்டு வைக்கிறோம் வேட்டு'' என்று கூற வேண்டும்.
சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 1 கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறது. எளிய மக்கள் தொண்டன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வர வேண்டும். நீங்கள் நூலிழையில் தப்பித்தீர்கள். 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்கில் வெற்றி பெற்றீர்கள். அ.தி.மு.க அடுத்த தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் புனித அரசை அமைத்துக் காட்டும்.
மக்கள் மன்றத்தில் நாங்கள் பேசுகிறோம். அதை சட்டமன்றத்திலும் பதிவு செய்ய வேண்டும். அதனால் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம். அதைப் பற்றி உங்களோடு விவாதிக்க வேண்டும். காவல்துறையின் மானியகோரிக்கையில் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அத்தனை கொடுமைகளை பற்றி எல்லாம் எடப்பாடியார் கேள்விகள் கேட்டார். அதற்கு முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி விடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பேரூர், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
- போகலூரில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் அப்பாஸ்கனி மற்றும் ரவிச்சந்திரன், கனகராஜ், கலைச்செல்வி, ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
உதயநிதி மன்றத்தைச் சேர்ந்த துரைமுருகன், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் மற்றும் போகலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி.
- யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.
ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்துபோல், திமுக ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம்.
சமத்துவத்தையும், சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்.
ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடு தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.






