தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்

போகலூரில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்
Published on

பரமக்குடி

பரமக்குடி அருகே போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் அப்பாஸ்கனி மற்றும் ரவிச்சந்திரன், கனகராஜ், கலைச்செல்வி, ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.

உதயநிதி மன்றத்தைச் சேர்ந்த துரைமுருகன், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் மற்றும் போகலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com