என் மலர்
நீங்கள் தேடியது "Minister Raghupathi"
- துணை நின்றவர்களை ரகுபதி கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.
- வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை' என்ற ஒரு கிராம முதுமொழிக்கேற்ப, தனக்கு அரசியல் வாழ்வளித்த புரட்சித் தலைவி அம்மாவின் முதுகில் குத்திவிட்டு 'கோபாலபுர கொத்தடிமைகளில்' ஒருவராகத் திகழ்ந்து வரும் திரு. எஸ். ரகுபதி என்ற திமுக மந்திரி, முதுகில் குத்துவது பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
அரசியலின் ஏணிப் படிகளில், இந்த நாலாந்தரப் பேர்வழி ரகுபதி ஏறுவதற்கு துணை நின்றவர்களை கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும். கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள் சேலத்தில் அளித்த பேட்டியில், விளம்பரத்திற்காக கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை அமைத்து ஷூ காலுடன் நடந்த திரு. ஸ்டாலின், எங்கள் புரட்சித் தமிழரைப் பற்றி, அவருடைய விவசாயத் தொழிலைப் பற்றி கேலியும் கிண்டலுமாக பேசியதற்கு அவர் பதிலளித்தார்.
நெல்லின் ஈர பதத்தை 18 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த அதிமேதாவி என்ன செய்தார் என்றும் ஈர பதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்த காரணத்தை ஏன் வெளியிட விடியா திமுக அரசு தயங்குகிறது என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேரடியாக பதில் சொல்ல வக்கற்ற முதலமைச்சர் திரு ஸ்டாலின், விவசாயிகளிடமாவது விளக்கிச்
சொல்லத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதைப் பற்றி இந்த விலாங்கு மனிதன் திரு. ரகுபதி தன்னுடைய சொந்த மாவட்டமான புதுக்கோட்டை விவசாயிகளிடம்
நேரில் போய் சொல்லத் தயாரா? டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, எங்கள்
அண்ணன் எடப்பாடியார் சுட்டிக்காட்டி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தினார்.
ஏற்றிய ஏணியையே எட்டி உதைப்பதுபோல், வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை. தற்போது எங்களது `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் மீது பாய்ந்து பிராண்டும் இந்த பிராணி, அறிவாலய எஜமானரை கடித்துத் குதறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
பயிர்க் காப்பீடு செய்யாத இந்த அரசின் தவறை சுட்டிக்காட்டினார்; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை எடுத்து வைத்தார். கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல நாட்களாக குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை சுட்டிக் காட்டினார்.
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின், விவசாயிகள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினார். மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டார்.
இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் பாதிக்கப்படும்போது வறட்சி நிவாரண நிதி, வெள்ள காலத்தில் நிவாரணம் உள்ளிட்ட சாதனைகளை விவரித்தார். ஆனால், ஸ்டாலினோ மழை வெள்ள நீரில் நனைந்து முளைவிட்ட நெல் கதிர்களை
'ட்ரே' வைத்து சென்னையில் பார்வையிட்டதை சுட்டிக் காட்டி, விடியா திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்புடன்
இருப்பதைக் குறிப்பிட்டார்.
மொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும் வகையில் கர்நாடக அரசு முயற்சிக்கும் மேகதாது அணை திட்டத்தை தன் சுயநலத்திற்காக, கண்டும் காணாமலும் இருக்கும் திரு. மு.க. ஸ்டாலினின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் முறையாக கடைமடை வரை செல்கிறதா என்பதைக்கூட பார்க்காமல், வெற்று விளம்பரத்திற்காக ஒருசில நடவடிக்கைகளை எடுக்கும் திரு. ஸ்டாலினின் விளம்பர மாடல் அரசை
தோலுரித்துக் காட்டினார்.
பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்னவென்றால், குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான். இவை எதற்கும் முறையாக பதில் சொல்ல வக்கில்லாமலும், வேளாண் துறைக்கென்று ஒரு மந்திரி, உணவு வழங்கல்
துறைக்கென்று ஒரு மந்திரி என்று இருவர் இருக்கும்போது, முந்திரிக் கொட்டை போல தன் இருப்பைக் காட்டிக்கொள்ள
வேண்டிய அவசியம் ஒட்டுண்ணி ரகுபதிக்கு ஏன் வந்தது? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டே பழக்கப்பட்ட
திமுக கும்பலில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ, தான் படித்த படிப்பைக்கூட மறந்துவிட்டு உளறுவாயராக
திரு. ரகுபதி இருப்பதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
அறிவாலயத்தின் வாசலில் நின்றுகொண்டு பதவிப் பிச்சை எடுக்கும் ரகுபதிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ, அதன் பொதுச் செயலாளரைப் பற்றியோ, அர்த்தம் இல்லாத வகையில் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் உங்கள் தலைவர் திரு.ஸ்டாலினையோ அவரது அருந்தவப் புதல்வர் திரு. உதயநிதியையோ பாராட்டி, நாமாவலி பாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
`யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'
என்பதை எச்சரிக்கையோடு திரு. ரகுபதிக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.
- மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை செய்துள்ளனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது.
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விஜய்யின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி மேலும் கூறுகையில்," வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் மக்களை சந்திக்க முடியாது.
பாஜக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமோ, தேவையோ திமுகவிற்கு கிடையாது. மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை செய்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது" என்றார்.
- அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க உத்தரவு.
- பெண்கள் பாதுகாப்பிலும் துளியும் சமரசமற்று செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
தமிழக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான்.
மேற்கொண்டு விடுதியில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் வேறு யாரும் பாதிக்கப்பட்டனரா என தனிதனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இக்கொடுமையை மிக துணிச்சலோடு எதிர்கொண்டு புகார் அளித்த மாணவிக்கு இந்த திராவிட மடால் அரசு என்றும் துணை நிற்கும்.
திராவிட மாடல் ஆட்சியும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பெண்களுக்கு அரணாக இருப்பதால் தான் இந்த மாதிரி குற்ற சம்பவங்களை எதிர்த்து தைரியமாக புகார் அளிக்க பெண்கள் முன்வருகின்றனர்.
கடந்தகால அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களே தாக்குதல்களுக்குள்ளாகிய மோசமான சூழல் நிலவியதை தமிழ்நாட்டு பெண்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை.
அப்படிப்பட்ட சூழலை எல்லாம் மாற்றி பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதோடு பெண்கள் பாதுகாப்பிலும் துளியும் சமரசமற்று செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான தண்டனையை மிகக் கடுமையாக்கியதோடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தண்டனையும் பெற்றுக்கொடுத்து வருகிறது திராவிடமாடல் அரசு. அரசின் இச்செயலையும் காவல்துறையின் செயல்பாட்டையும் உயர்நீதிமன்றமே பாராட்டியும் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அதிமுக அரசு எப்படி கையாண்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
அதிமுக வை சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்ற புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தையே அதிமுக குண்டர்களை விட்டு தாக்கிய கொடுமையும் அரங்கேறியது. அப்படி anti-women admk government ஐ நடத்திய பழனிசாமி க்கு, தற்போது குற்றங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் திராவிட மாடல் அரசைப்பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
இதோ இப்போது கூட அரசு விரைவாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்ட பின்னும் இதன் மூலம் எப்படியாவது டெல்லியின் எஜமானர்களுக்கு சாமரம் வீச, பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நிற்காமல் அதை வைத்து அரசியல் செய்யத் தொடங்கி விட்டார் பழனிசாமி. தமிழ்நாடு Out of Control என மாண்புமிகு முதல்வர் கூறியதை மடைமாற்றும் வேலையில் இறங்கி உள்ளார் அடிமை பழனிசாமி.
எப்போதெல்லாம் அமித்ஷாவிற்கும் , டெல்லிக்கும் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் Delhi Control -லில் இருக்கும் பழனசாமி ஓடோடி வந்து வீண் அவதூறுகளை பரப்பி காப்பாற்றத் துடிக்கிறார். 'டெல்லி அடிமை' என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார். அமித்ஷா வீட்டுக்கு அல்ல.
- தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து நிற்கும் முதலமைச்சரைப் பார்த்துப் பேச அருகதை இருக்கிறதா?
தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பானா ரேஞ்சில் கோழை பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
2031 சட்டமன்றத் தேர்தல் வரையில் பாஜகவோடு கூட்டணி இல்லை எனப் பேசிய வீராதி வீரர் யார்? கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக கூட்டணி கிடையாது என விதவிதமான மொழிகளில் நீங்கள் பேசிய வீடியோக்கள் இன்றைக்கும் ட்ரோல் ஆகிக் கொண்டிருக்கிறது.
அது உங்கள் முகத்திரையைக் கிழிக்கும் கண்ணாடிதானே! அது உங்களைப் பார்த்துத்தானே சிரிக்கிறது.
தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லி செல்லாத நீங்கள், உங்கள் மகன் மிதுனுக்காகதானே அமித்ஷாவை போய் பார்த்தீர்கள்.
ரெய்டில் குடும்பம் சிக்கி விடக் கூடாது என்பதற்காகத்தானே பாஜகவோடு கூட்டணி வைத்தீர்கள். அதற்குக் காரணம் உங்கள் குடும்பம் தானே?
''பாஜகவோடு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை'' என வீராவேசமாகப் பேசிய 'சூனாபானா' எடப்பாடி பழனிசாமி, வெள்ளைக் கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திக் கொண்டு போனர்.
கார்கள் மாறி மாறி கள்ளத்தனமாக அமித்ஷாவை டெல்லியில் போய் பார்த்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாத பழனிசாமி, தன் குடும்பத்திற்குப் பாதிப்பு என்றதும் டெல்லிக்கு ஓடிச் சென்று அமித்ஷாவின் காலடியில் அதிமுகவை அடகு வைத்தார்.
கடந்த ஜனவரி 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தொடர்பாக 26 இடங்களில் நடந்த சோதனையில் 10 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது. அன்று முதல் கைது காய்ச்சலில் பயந்து வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தவர்தான் பழனிசாமி.
அந்த வழக்கில் இருந்தும் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை சோதனைகளில் இருந்தும் தப்பிக்கவும் பாஜக கூட்டணிக்குத் தாவியவர்தான் பழனிசாமி.
"படுத்தே விட்டாரய்யா..." என்ற சொற்களுக்கு உருவமே கூவத்தூர் எடப்பாடி பழனிசாமிதான். அந்த கூவத்தூரில் கற்ற கலையை அமித்ஷா வீட்டு வாசல் வரையில் போய் அரங்கேற்றினார். முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார்.
அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு. நாடகங்களை வைத்து அரசியல் செய்யலாம் எனும் பகல் கனவில் அடுக்கடுக்கானப் பொய்களை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு அனைத்திந்திய அளவிலேயே பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்பதை உலகறியும். ஊழலில் முதுகலைப் பட்டம் பெற்று, ஊதாரி ஆட்சி நடத்தி பாஜகவிடம் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்கு டெல்லி பயணம் என்றால் தவழ்ந்து செல்வது மட்டும்தானே தெரியும்.
ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கே சவால் விடும் வகையில் பாஜகவின் கால்களில் ஊர்ந்து சென்று அடிமை ஊழியம் செய்யும் பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து நிற்கும் முதலமைச்சரைப் பார்த்துப் பேச அருகதை இருக்கிறதா?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் கொடுத்த பெண்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டிப்பார்த்த பழக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் NIC நிறுவனமே அளித்த விளக்கங்களை மறைத்து பச்சைப் பொய்யைக் கூசாமல் அடித்து விடுகிறார் பழனிசாமி.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் அதிமுகவின் வட்டச் செயலாளர் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் நினைத்துக் கொண்டாரா பழனிசாமி?
பொள்ளாச்சி தொடங்கி அண்ணாநகர் பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமி,
பெண்களுக்குத் தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என விஷமப் பிரச்சாரத்தைச் செய்து மடைமாற்றலாம் என மடத்தனமான அரசியல் செய்தால் மக்கள் நம்பிவிடுவார்களா?
தமிழ்நாட்டில் நீட்டை நுழைத்துப் பல மாணவர்களின் உயிர்கள் பறிபோகக் காரணமான பழனிசாமி, திமுக கொடுத்த அழுத்தத்தையும் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் கொண்டு வந்ததுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு.
அதற்காகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்த போது ஆளுநரை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தியது. அன்றைக்கு அதிமுக ஆளுநரை எதிர்க்கக் கூட துணிவில்லாமல் தூங்கி கொண்டிருந்தது.
மருத்துவப்படிப்புக்கு மட்டும் இருந்த உள் ஒதுக்கீட்டைப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்படிப்புகளுக்கு நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பலனடையச் செய்து வருவது திராவிட மாடல் அரசு.
நீட்டை நுழைத்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையைக் காவு கொடுத்த அதிமுக-வினர் வெட்கித் தலைகுனியாமல் வீர வசனங்கள் பேசித் திரிவது வெட்கக்கேடு.
நீட், உதய் மின் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல், மற்றும் தேசியக் குடியுரிமை சட்டம் (CAA) போன்றவற்றிற்கு ஆதரவு அளித்து துரோகம் என்றால் பழனிசாமி, பழனிசாமி என்றால் துரோகம் என துரோக ஆட்சி நடத்திய துரோகி பழனிசாமி மாநிலத்தின் உரிமைகளுக்காக நாளும் போராடிக்கொண்டிருக்கும் திமு கழகத்தைப் பார்த்து குற்றம் சொல்ல எந்த அருகதையும் இல்லை,
ஆளுநர்களுக்கு அடிபணிந்து அவர்களை நாட்டாமை செய்யவிட்ட அடிமை ஆட்சிதான் பழனிசாமியின் அவல ஆட்சி. ஆளுநர்களின் சண்டித்தனத்தை அடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பைப் பெற்று இன்று இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் ஆட்சி!
வரிப்பகிர்வு, வெள்ள நிவாரணம், கல்வி நிதி எனப் பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் நிதி உரிமைகளை முடக்கும் பாஜகவைக் கேள்வி கேட்கத் துப்பில்லை. வக்கில்லை. திராணி இல்லை இந்த வீர வசனங்கள் எல்லாம் நமக்குத் தேவைதானா பழனிசாமி?
தமிழ்நாட்டின் எந்த உரிமையைப் பெற பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்று சொல்ல எதாவது பதில் வைத்திருக்கிறாரா பாதம்தாங்கி பழனிசாமி? தனது மகனுக்காகவும் சம்பந்திக்காகவும் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டு, பாஜகவின் செய்தி தொடர்பாளராக பழனிசாமி மாறுவதற்குப் பதில் கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம்.
பழனிசாமியின் அபத்தங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் ஒருநாளும் வெற்றியடையாது. மக்களுக்கு உண்மைகள் தெரிந்ததால்தான் பத்து தோல்வி பழனிசாமி எனப் பட்டம் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
- ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார்.
இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்த போது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார்.
தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட சபை மீறிய செயலை ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. எம்.பி.க்.கள் முடிவு செய்தனர். அதற்காக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவு அவர்கள் டெல்லி சென்றனர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் உடன் உள்ளனர்.
இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.
- முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
அரசு நிதியிலிருந்து என்னென்ன பெற முடியுமோ, அதை பெற்று மக்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செய்ய முடியாத திட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு செல்வாக்கு உள்ள நபர்களை சந்தித்து அவர்கள் மூலமாக நிதி பெற்று மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறோம். ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது. அப்பொழுது முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் என 138 சிறைகள் உள்ளன.
சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை ஏ பிரிவு கைதிகள், பி பிரிவு கைதிகள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்கப்பட்டு வந்தது. முட்டையும், காய்கறி உணவுகளுடன், காலையில் பொங்கல், உப்புமா, கஞ்சி சட்னியும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது சிறைவாசிகள் நலனுக்காக நிபுணர் குழுவினர் அறிக்கையின் படி உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுக்கு ஒரு நபருக்கு ரூ.96-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இதில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி றைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள்:-

- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை? இது ஜனநாயக நாடா அல்லது கவர்னரின் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினார்.
- பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
- எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் அவர், மூவரும் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பற்றி ஆளுநர் விமர்சித்துள்ளார். அரசு திட்டத்தில் விளக்கம் தேவைப்பட்டால் அது குறித்து கேட்டறியலாம்.
அதைவிட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?" என்றார்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது.
மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.

நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?
கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது.
அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?
அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.
எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.

'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர்.
சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை.
குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை.
நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.
"ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.
அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.
ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்களவை தேர்தலுக்காக மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்
- போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது.
தேர்தலுக்கு தேர்தல் மதுரை எய்ம்ஸ் வரும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவை தேர்தலுக்காகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அப்பணிகள் நடைபெறாது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காக பாஜக தமிழகம் மீது பழி போட வேண்டாம். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.
தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
மேலும், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது என்று குற்றம் சாட்டிய அமைச்சர், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்றும் பாஜகவில் உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்துவதை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- திருமண வரவேற்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
- உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.
புதுக்கோட்டை:
தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி-டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் உள்ள மணமகள் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
மணமக்களை தமிழக முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் மாலை 5.50 க்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 6 மணிக்கு காரில் புறப்பட்டு 6.45 மணிக்கு புதுக்கோட்டை செல்கிறார்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்பு அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்பு 8.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை ஆகிய இடங்களில் தி.மு.க. வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
- ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி.
- யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.
ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்துபோல், திமுக ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம்.
சமத்துவத்தையும், சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்.
ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடு தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.






