என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளி வியாபாரிக்கு கொலை மிரட்டல்
- ரூ. 20 லட்சம் மதிப்பிலான 33.5 கிலோ எடை கொண்ட வெள்ளியை வாங்கி சென்றார்.
- பல மாதங்கள் ஆகியும் தேவேந்திரன் அதை திருப்பிக் கொடுக்கவில்லை
சேலம்:
சேலம் சிவதாபுரம் பன ங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 45). வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் குடுமியான் தெருவை சேர்ந்த தேவேந்திரன் (44) என்பவர், வெள்ளி வேலை செய்து தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மதிப்பிலான 33.5 கிலோ எடை கொண்ட வெள்ளியை வாங்கி சென்றார்.
பல மாதங்கள் ஆகியும் தேவேந்திரன் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் வெள்ளிக்கான பணத்தையும் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.இது குறித்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜனின் வீட்டிற்கு சென்ற தேவேந்திரன், பூபதி, முரளி ஆகிய 3 பேர், ஆனந்தராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இது குறித்து ஸ்ரீ ஆனந்தராஜன் கொண்ட லாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.