விருத்தாசலத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
விருத்தாசலத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Published on

கடலூர்:

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். இன்று காலை, கோயில் பூசாரி தனவேல் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயில் கதவு பூட்டை உடைத்து, நேற்று இரவு மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கோயில் உண்டியல் மற்றும் இரும்பு கம்பி கோயில் எதிரே உள்ள மணிமுத்தாற்றங்கரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com