என் மலர்

  நீங்கள் தேடியது "Biscuit"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  பெருந்துறை:

  பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் பெருந்துறையை சேர்ந்த ரதீஷ்குமார் (33) என்பவருக்கு சொந்தமான பிஸ்கட் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது.

  இந்த பிஸ்கட் கம்பெனியில் பிஸ்கட் பேக்கிங் செய்ய பயன்படும் கவர்கள் மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் கவர்களில் தீபிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.

  இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

  நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை நடத்தினர்.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளுக்காக பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று குழந்தைகளிடம் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துள்ளார். குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட முயன்ற போது, பிஸ்கட்டின் உள்ளே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டு தந்தையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

  பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ் அந்த பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- அது பிரிட்டானியா கம்பெனியின் தயாரிப்பு பிஸ்கட். இதனை பொங்கலூரில் உள்ள ஒரு விநியோகிஸ்தர் கடைக்கு வினியோகம் செய்துள்ளார். அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் வந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு தேங்காய் பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த தேங்காய் பிஸ்கெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  மைதா மாவு - 1 1/4 கப்
  சர்க்கரை - 3/4 கப்
  வெண்ணெய் - 100 கிராம்
  பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
  தேங்காய் துருவல் - 1/2 கப்  செய்முறை :

  மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து கொள்ளவும்.

  அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, அதில் தேங்காய் துருவலை வைக்கவும்.

  Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.

  வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

  வெண்ணெய், சர்க்கரை கலவை கிரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

  பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும். (அழுத்திப் பிசையவேண்டாம்).
  தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறி விடவும்.

  இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி, உதிரியாகவும் இருக்கும்
   
  பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ, கன சதுரமாகவோ செய்துக்கலாம்.

  எல்லா பிஸ்கட்டுகளையும் செய்து அடுக்கிய பிறகு பேக்கிங் ட்ரேயை 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.

  Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.

  பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake  செய்யவும்.
   
  பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும். oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும்.

  சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

  காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.  

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும்.
  குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.

  பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.

  முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும். குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை கொடுப்பார்கள். இது மருந்துக்கடைகளில்தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.

  புரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இதே விதிதான். புரதச்சத்து மட்டுமின்றி எந்த சத்தையும் சரிவிகித உணவின் மூலம் பெறுவதே சரியான வழி.

  பொதுவாக கீரை, கேழ்வரகு, சில பருப்பு வகைகளில் இருந்து நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதோடு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலங்கள் என மற்ற சத்துகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியத்துடன் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற மற்ற சத்துகளும் தேவை. மற்ற சத்துகள் இல்லாமல் கிடைக்கும் கால்சியம் சத்துகள் கற்களாக மாறும் வாய்ப்பு உண்டு.  ‘‘வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும்.

  வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கெட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டும்.

  எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..

  நம் உணவுப்பழக்கத்திலேயே பிஸ்கெட்டை தவிர்த்து, நம் பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வர வேண்டும். ‘‘ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பாதாம், பொரி, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற நம் கலாசாரத்துக்கும் நம் உடல்நலத்துக்கும் ஏற்ற உணவுகளை சாப்பிட்டுப் பழக வேண்டும்.

  உடல்நலத்துக்கு கேடான மைதாவை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல பிஸ்கெட்டுகள் மைதாவில் தான் தயாராகின்றன. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம்.

  ×