என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தருமபுரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி
    X

    தருமபுரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி

    • பைக் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள அங்கனாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வினோத் (வயது29). இவர் தருமபுரி நகர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கனாம் புதூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (23) ஓட்டி பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த வினோத், ஹரிகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×