பாஜகவை திருப்திப்படுத்தும் 'துக்ளக் கமிஷன்'... தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா பானர்ஜி

எந்த நாற்காலியும் நிரந்தரமானது அல்லஇந்த அரசாங்கம் [மத்திய அரசு] 2026 க்கு மேல் நீடிக்காது.
பாஜகவை திருப்திப்படுத்தும் 'துக்ளக் கமிஷன்'... தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா பானர்ஜி
Published on

தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் 'துக்ளக் ஆணையமாக' மாறிவிட்டது என செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை 100 சதவீதம் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.

"ERO-க்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ERO-க்களிடம், அவர்களின் குற்றம் என்ன, அவர்களின் தவறு என்ன என்று கேட்டீர்களா? என ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார். 

தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயக உரிமைகளைப் பறித்து, சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள். எந்த நாற்காலியும் நிரந்தரம் அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக ஐடி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com