search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vindhya"

    • சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
    • திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் கொள்கைபரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா செல்லூர் 50 அடி சாலை, முனிச்சாலை சந்திப்பு, வடக்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பு, ஜீவா நகர் 1-வது தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு கூட்டணியையும் மக்கள் நம்ப தாயாராக இல்லை. வைகோ தனது மகனுக்கு ஒற்றை சீட் வேண்டும் என முதலமைச்சர் வீட்டின் பூட்டு போல தொங்கிக் கொண்டு இருந்தார். திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.

    பெரம்பலூர் தனித் தொகுதி ஆன பிறகு ஆ.ராசாவுக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளது என தெரியவில்லை. தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க. கூட்டணி மிகவும் மோசமாக உள்ளது.


    பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் கட்சியினர் கூட்டணியில் ஏன் இருக்கிறோம், ஏதற்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகும் என தெரியவில்லை. சரத்குமார் விருதுநகரை பெற்றுக் கொண்டு கட்சியை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டார். தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. பா.ம.க.வை கழற்றி விட்டு விடும் என ராமதாஸ் கூறியும் அன்புமணி ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி வைத்துள்ளார்.

    மரியாதையுடன் வாழ்ந்த டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் பாவம். சுயநலத்திற்காகவும், வாரிசுக்காகவும் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். தி.மு.க. தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். தி.மு.க. சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தி.மு.க. கொடுத்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றமால் அமைச்சர் உதயநிதி செங்கல்லை தூக்கி கொண்டு செல்கிறார். தி.மு.க. நீட்டை ஒழிப்போம் என சொல்லி விட்டு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. தேர்தலில் தி.மு.க.வையும், திருந்தாத பா.ஜ.க.வையும் மக்கள் ஒற்றை விரலால் ஒங்கி அடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை விந்தியா அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார்.
    • விந்தியாவின் சார்பில் அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், வக்கீலுமான இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் பேச்சாளராகவும் இருப்பவர் நடிகை விந்தியா. இவரைப்பற்றி தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விந்தியாவின் சார்பில் அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், வக்கீலுமான இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    அதில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் குடியாத்தம் குமரன் பேசியிருந்த வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது. இது பற்றி மகளிர் ஆணையம் ஆய்வு செய்தது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.


    குடியாத்தம் குமரன்- விந்தியா

    இதைதொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தி.மு.க. பேச்சாளரான குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து குடியாத்தம் குமரனை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடியாத்தம் குமரன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருகிறார். தி.மு.க. பேச்சாளரான அவர் தனது ஊர் பெயருடனேயே பேச்சாளராக மேடைகளில் பேசி வருகிறார்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×