சிதறும் அதிமுக... பெருகும் கட்சிகள்: உருவானது 'புரட்சி அதிமுக'!

அதிமுகவை தவிர பிரிதொரு பிரிவை தேர்ந்தெடுக்கமாட்டேன் எனக் கூறியிருந்தார் ஓபிஎஸ்.கடந்த மாதம் சசிகலா புதியக் கட்சியைத் தொடங்கியிருந்தார்.
சிதறும் அதிமுக... பெருகும் கட்சிகள்: உருவானது 'புரட்சி அதிமுக'!
Published on

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பலரும் ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மூத்த அரசியல்வாதி பெங்களூரு புகழேந்தி புரட்சி அதிமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அதிமுகவில் இருந்த இவர், உட்கட்சி மோதலின்போது ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டார். தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்தநிலையில், புதியக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம் சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் புதிய அரசியல் கட்சிகள் தொடங்கிய நிலையில் தற்போது இவரும் தொடங்கியுள்ளார்.  ஆனால் புதிதாக தொடங்கப்படும் கட்சிகள் அனைத்தும் அதிமுக பெயரில் கொண்டே தொடங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com