search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Secretaries"

    • சமீபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
    • அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.

    இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

    தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    • சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தகவல்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தாராபுரம் : 

    அ.தி.மு.க., ஓபிஎஸ் அணியில் தாராபுரத்தை சேர்ந்த டி. டி. காமராஜ் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம், உடுமலை மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் பொறுப்பளாராக செயல்படுவார். மற்றொரு மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என அ.தி.மு.க. ஓபிஎஸ். அணியின் தலைமை அறிவித்து உள்ளது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்று கொண்ட பின் டி.டி. காமராஜ் தாராபுரம் வந்தபோது புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. #ADMK #Meeting
    சென்னை:

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறும். சென்னையில் நடைபெறும்
    இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

    அன்றைய தினமே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ×