என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணியின் திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் நியமனம்
Byமாலை மலர்25 Nov 2022 4:24 PM IST
- மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் :
அ.தி.மு.க., ஓபிஎஸ் அணியில் தாராபுரத்தை சேர்ந்த டி. டி. காமராஜ் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம், உடுமலை மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் பொறுப்பளாராக செயல்படுவார். மற்றொரு மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என அ.தி.மு.க. ஓபிஎஸ். அணியின் தலைமை அறிவித்து உள்ளது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்று கொண்ட பின் டி.டி. காமராஜ் தாராபுரம் வந்தபோது புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story
×
X