என் மலர்
நீங்கள் தேடியது "செங்கோட்டையன்"
- செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று ராஜினாமா.
- செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்க வாய்ப்பு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்த நிலையில், விஜயை சந்தித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கே.ஏ. செங்கோட்டையன் 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போவதாக கூறியுள்ளாரே? என கேள்வி கேட்டபோது, செங்கோட்டையன் 5-ந்தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறுவார் என பார்ப்போம் என தெரிவித்து விட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து திருமண விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் நிருபர்கள், நீங்கள் சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் 5-ந்தேதி பதில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜய குமாரும், செங்கோட்டையனுடன் முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் அரைமணி நேர இடைவெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்காத வண்ணம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றனர்.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்தித்துள்ளார்.
இங்கு, முதல் வரிசையில் இபிஎஸ்-ஐ நேராக பார்த்தபடி செங்கோட்டையன் அமர்ந்திருந்தார்.
- அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.
- எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலு மணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்தி லிங்கத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல பலரும் திரண்டு சென்றார்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசல் புரசலாக அ.தி.மு.க.வுக்குள் பேசப்பட்ட இந்த விவகாரம் தி.மு.க. அமைச்சரான ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்துக்கு பிறகு சூடு பிடித்தது.
அவர் கூறும் போது, தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? வேலுமணியா? என்பது தெரிய வரும். பெரிய பிளவு ஏற்படும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.
சொன்னால் நம்புங்க..
இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சொன்னால் நம்புங்க நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த மாட்டேன் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் செங்கோட்டையனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். ஆனால் என்னதான் நடக்குது பார்ப்போம் என்பது போல் தொண்டர்கள் பரிதாபமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
- அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம்.
- அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.
திருச்சி:
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, பாராட்டு விழா மேடையில் ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்படாததால் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார். ஆனால் செங்கோட்டையன் பங்கேற்காதது அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம். இந்தமுறை சில துரோகிகளால் தோல்வி ஏற்பட்டது என்று தான் கூறினேன். அந்த தொகுதியை குறிப்பிட்டு மட்டும் தான் பேசினேன். மற்றபடி நான் வேறு எதுவும் பேசவில்லை. அரசியலை பொறுத்தவரை அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தால் நல்லது. அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி அமையுமா? என்பது பற்றியெல்லாம் பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன். அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






