என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.-வில் இணைகிறாரா? விஜயை சந்தித்த செங்கோட்டையன்
    X

    த.வெ.க.-வில் இணைகிறாரா? விஜயை சந்தித்த செங்கோட்டையன்

    • செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று ராஜினாமா.
    • செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்க வாய்ப்பு.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்த நிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

    புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்த நிலையில், விஜயை சந்தித்துள்ளார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×