என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'80 சதவீதம் அதிமுகவினர், திமுகவில் இணைய உள்ளார்கள்'- ஓபிஎஸ்!
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும்.
- அதிமுகவினருக்கு பதில்சொல்ல வேண்டிய தேவையில்லை.
திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் மார்ச் 7ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்,முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பந்தல்கால் நடும் விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,
நாட்டு மக்களுக்கு, அடித்தள மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து, புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்ற இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலிலும் முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் தங்களுடைய விருப்பத்தை மக்கள் தெரிவித்துள்ளார்கள். அதிமுக தொண்டர்கள் 70, 80 சதவீதம் மேல் திமுகவில் இணைகிற நல்ல சூழல் உள்ளது. தளபதி ஆட்சியின் திறன், அனைத்து தரப்பட்ட மக்களை அரவணைத்து செல்கின்ற அவருடைய தலைமை ஏற்று மனப்பூர்வமாக இதயபூர்வமாக இணைகின்ற நிகழ்ச்சிதான் இது." என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, திமுகவில் இணைந்து அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார் ஓபிஎஸ் என்ற அதிமுகவினர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெறும். அதேபோல முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.






