என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #MKStalin திருச்சி மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும்- அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்
    X

    #MKStalin திருச்சி மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும்- அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

    • மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
    • வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்தார்.

    மாநாட்டு திடலில் இன்று காலை அவர் நிருபர்களிடம் கூறும் போது, மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள் உள்பட மத்திய மண்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    இது போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் தலைவருக்கு கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உத்வேகமும் கிடைக்கும் என்றார்.

    Next Story
    ×