என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணி தொடர்பாக த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேசுகிறதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்
    X

    கூட்டணி தொடர்பாக த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேசுகிறதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்

    • தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த சிந்தாந்தக் கூட்டணி.
    • தேர்தல் கூட்டணி தொடர்பாக திரைமறைவில் எந்தவொரு அரசியலும் நடைபெறவில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பேச்சுவார்த்தையில் கூடுதல் இடங்கள் கேட்பது வழக்கமானதுதான். தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடம் கேட்டுள்ளோம்.

    * முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயமாக அதை பரிசீலிப்பார். எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் சீராக நடக்கிறது.

    * தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த சிந்தாந்தக் கூட்டணி.

    * கூட்டணி தொடர்பாக த.வெ.க.வுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை.

    * த.வெ.க.விடம் பேசுமாறு தலைமையிடமிருந்து எந்த உத்தவும் எனக்கு வரவில்லை.

    * தேர்தல் கூட்டணி தொடர்பாக திரைமறைவில் எந்தவொரு அரசியலும் நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×