ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார் சபாநாயகர் அப்பாவு

என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார் சபாநாயகர் அப்பாவு
Published on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.

அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்

ஆளுநர் தனது உரையை புறக்கணித்த நிலையில் தமிழக அரசின் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை சபாநாயகர் அப்பாவு பட்டியலிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com