முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்றது ஏன்? - மாணவர் விளக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்றது ஏன்? - மாணவர் விளக்கம்
Published on

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் புஷ்பராஜ் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பேசிய அந்த மாணவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் ஒருவர் பட்டம் வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை. முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெற்று தான் இந்த பட்டப்படிப்பை நான் முடித்தேன். அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் படத்தை இணைத்து ஆளுநரின் கையில் பட்டம் வாங்கினேன்" என்று தெரிவித்தார்.

கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com