பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள காஷ்மீர் செல்கிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.காஷ்மீர் முதலமைச்சரும், துணை வேந்தருமான உமர் அப்துல்லா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள காஷ்மீர் செல்கிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
Published on

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 26-ந்தேதி காஷ்மீர் செல்ல உள்ளார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரும், கென்யா பல்கலைக்கழக வேந்தருமான மனோஜ் சின்ஹா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குகிறார். காஷ்மீர் முதலமைச்சரும், துணை வேந்தருமான உமர் அப்துல்லா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 59,558 பட்டங்கள் - 44,910 இளங்கலை, 13,545 முதுகலை, 461 எம்.டி/எம்.எஸ், 4 எம்.சி.எச், 18 எம்.ஃபில் மற்றும் 620 பி.எச்.டி பட்டங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் அதிகாரி வி.கே.பிர்டி ஆய்வு செய்தார்.

பள்ளத்தாக்கின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com