என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை ஜனாதிபதியை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி
    X

    துணை ஜனாதிபதியை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

    • எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
    • இன்று இரவு உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தைச் சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகம் பெற்றுள்ள பெருமை என தெரிவித்தார்.

    அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

    இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

    Next Story
    ×