என் மலர்
இந்தியா

இந்திய எல்லை பகுதி அருகே பாக். நோட்டுக்களுடன் கண்டெடுக்கப்பட்ட பலூன்... போலீஸ் விசாரணை
- பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டது.
- பாகிஸ்தான் நோட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் உண்மையானவையா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள விமானப்படை பகுதியில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (PIL) பெயரைக் கொண்ட பலூன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Next Story






