குண்டடிபட்டும் பின்வாங்காத 'டைசன்'.. 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல வீரர்களுக்கு உதவிய ஜீவன்

பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.
குண்டடிபட்டும் பின்வாங்காத 'டைசன்'.. 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல வீரர்களுக்கு உதவிய ஜீவன்
Published on

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.

கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.

காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com