என் மலர்
நீங்கள் தேடியது "SLvPAK"
- முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 160 ரன்கள் குவித்தது.
- கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார்.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார். குசால் மெண்டிஸ் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் வாசிம் ஜுனியர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் சல்மான் ஆகா 12 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 12 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 1-1- என சமனில் முடிந்தது.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஹசரங்கா வென்றார்.
- முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற இருந்தது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் 2வது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெனித் லியாங்கே 40 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் சல்மான் மிர்சா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டும், வாசிம் ஜூனியர், ஷதாப் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாகிப்சதா பர்ஹான் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ஆட்ட நாயகன் விருது ஷதாப் கானுக்கு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது.
- டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி 2-நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 24-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி 2-நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி விளையாடுகிறது.
இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் புதிய தோற்றம் கொண்ட வெளியானது. அதில் அவர் மொட்டையடித்தப்படி காரில் பயணம் செய்வது போல் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம்:-
பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, ஹசன் அலி, இமாம் உல் ஹக், முகமது ஹுரைரா, முகமது நவாஸ், நசீம் ஷா, நோமன் அலி , சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல், ஷாஹீன் அப்ரிடி, ஷான் மசூத்
- சதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலில் மளமள என விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
ஐந்தாவது விக்கெட்டிற்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர். மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சமரவிக்ரமா 36 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செயா சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- பாபர் அசாம் 13 ரன்னில் பிரபாத் ஜெயசூர்யாவிடம் விக்கெட்டை இழந்தார்.
- பாகிஸ்தான் அணி 101 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா ஆகியோரின் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 312 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 13 ரன்னில் பிரபாத் ஜெயசூர்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். பிரபாத் ஜெயசூர்யாவுக்கு எதிராக 5 இன்னிங்சில் விளையாடிய பாபர் அசாம் 143 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும். முக்கியமாக 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.
பிரபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாபர் அசாம் திணறி வருகிறார் என ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பாபர் அசாம் டிரெண்டாகி வருகிறார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 312 ரன்கள் எடுத்தது.
- தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
காலே:
பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்து 122 ரன்னும், மேத்யூஸ் அரை சதமடித்து 64 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பாகிஸ்தான் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த ஷகீல், ஆகா சல்மான் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
இறுதியில், 2ம் நாள் முடிவில் பாகிஸ்தா 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ஷகீல் 69 ரன்னும், ஆகா சல்மான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- பாகிஸ்தானுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை.
- பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நோமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
காலே:
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 101 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், ஆஹா சல்மானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 461 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சாத் ஷகீல் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதையடுத்து 149 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தனஞ்செயா மற்றும் மெண்டீஸ், நிசான் ஆகியோரின் ஆட்டத்தால் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நோமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இலங்கை முதல் இன்னிங்சில் 312, 2-வது இன்னிங்சில் 279
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 461 ரன்கள் குவித்தது
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 312 ரன்னும், பாகிஸ்தான் 461 ரன்னும் எடுத்தன.
149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 279 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முதலில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது. இமாம்-உல்-ஹக் (25 ரன்) கேப்டன் பாபர் ஆசம் (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் ஆசம் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷாகீல் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இமாம்-உல்-ஹாக் அரைசதம் அடித்து நிலைத்து நிற்க பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் கொழும்பில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 322 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 262 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ - இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் உமர் யூசுப் 88 ரன்னும், முகமது ஹாரிஸ் 52 ரன்னும், முபாசிர் கான் 42 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 85 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹன் அராச்சிகே 97 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இலங்கை ஏ அணி 45.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் ஏ அணி சார்பில் அர்ஷத் இக்பால் 5 விக்கெட், முபாசிர் கான், சுபியான் முகிம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அர்ஷத் இக்பாலுக்கு வழங்கப்பட்டது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தானின் அப்ரார் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.
கொழும்பு:
இலங்கை சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினர். 36 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
நெருக்கடியில் தவித்த இலங்கை அணியை தினேஷ் சண்டிமால்-தனஞ்சயா டி சில்வா ஜோடி சரிவிலிருந்து மீட்டது.
பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த தனஞ்செய டி சில்வா 57 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 37 ரன்னிலும் அவுட்டாகினர். ரமேஷ் மெண்டிஸ் 27 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இலங்கை அணி 48.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டகாரர் இமாம் ஹல் உக் 6 ரன்னில் அவுட்டானார். அப்துல்லா ஷபீக்குடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களில் ஆல் அவுட்டானது.
- 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு:
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.
அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 28.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.






