ஆப்கன் தாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடைவிதித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைகள் இடையே மோதல் இருந்து வந்தது.பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
ஆப்கன் தாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடைவிதித்த பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த எல்லை மோதலால இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

தலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டது எனவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com