என் மலர்
நீங்கள் தேடியது "Salman Agha"
- பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது.
- பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. சல்மான் ஆகா சதம் அடித்தார்.
அவர் 87 பந்தில் 105 ரன்னும் (9 பவுண்டரி), ஹூசைன் தலத் 62 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹசரங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹசரங்கா 52 பந்தில் 59 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
- தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
- இந்தத் தொடரில் இந்திய அணி நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது.
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்.
தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார். கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்துள்ளார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அப்படி நடந்துகொண்டார். அது பரவாயில்லை.
நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் அவமரியாதையாக நடந்துகொண்டனர். என் வாழ்வில் இது நடப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்தத் தொடரில் நடந்தவை மிகவும் மோசமானவை, இது ஒரு கட்டத்தில் நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல
இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை. மக்கள் எங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் இப்படி நடந்துகொண்டால், நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவில்லை
ACC-க்கு தலைவர் ஒருவர் இருந்தால் அவரிடம் கோப்பை வாங்குவதுதான் முறை. நீங்கள் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி வாங்குவீர்கள்?
நான் இதை மீண்டும் சொல்கிறேன். என்ன நடந்ததோ அது தவறு. அது நடந்திருக்கக்கூடாது. எனவே அதைச் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சல்மான் ஆகா கூறியுள்ளார்.
- நாங்கள் யாரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணி.
- இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம்.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர்-4 சுற்று போட்டியில் வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-
இந்த மாதிரியான ஆட்டங்களில் நீங்கள் வெற்றி பெற முடிந்தால், நீங்கள் ஒரு சிறந்த அணியாக இருக்க வேண்டும்.
அனைத்து வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங்கில் சில முன்னேற்றம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் உழைப்போம். ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் பந்து வீசிய விதம் சிறப்பா னது. வெற்றி பெறுவதற்கான வழிகளை நாங்கள் கண்டு பிடித்து வருகிறோம்.
இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் யாரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணி. இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம். இந்தியா உட்பட எந்த அணியையும் வெல்லும் குணம் எங்களது அணிக்கு உள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் ஆட்ட நாயகன் விருது வென்ற வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி கூறும் போது, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட் டியை எதிர்நோக்கி இருக்கிறோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
- எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
- நாங்கள் எங்களுடைய திட்டங்களை வெளிப்படுத்த முடியும் என்றால் வெற்றி நிச்சயம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் போட்டியில் ஓமன் அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-
நாங்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றால், எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் திறமை எங்களிடம் உள்ளது.
எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓமனுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள்.
நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மூன்று பேரும் மாறுபட்ட ஸ்பின்னர்கள். நாங்கள் சைம் என்பவரையும் கொணடுள்ளோம். இவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் என வரும்போது, ஏராளமான ஸ்பின்னர்கள் தேவை.
இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.
- ஆசிய கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
- சூர்ய குமார் யாதவ் மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.
அபுதாபி:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்பட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது.
தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 94 ரன் வித்தியாசத்தில் ஆங்காங்கை வீழ்த்தியது.
முன்னதாக இந்தப் போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
நிருபர்கள் சந்திப்புக்கு பிறகு ஒவ்வொரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்ள வேண்டும். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்கல் வரை காத்திருக்காமல் வெளியேறினார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோ வெளியானது.
இந்தப் போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதும் ஆட்டம் துபாயில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. எல்லையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.
அதே நேரத்தில் சூர்ய குமார் யாதவ் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் உள்ளிட்ட மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.

பின்னர் தான் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்ற தவறை உணர்ந்தார். இதை தொடர்ந்து அவர் சூர்யகுமார் யாதவிடம் சென்று கை குலுக்கி கொண்டார். இந்த புதிய வீடியோவும் வெளியானது. இதேபோல சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியுடன் கை குலுக்கி கொண்டார்.






