என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எந்தவொரு அணியையும் வீழ்த்தும் அளவிற்கு திறமையாக இருக்கிறோம்: இந்தியா போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் கருத்து
    X

    எந்தவொரு அணியையும் வீழ்த்தும் அளவிற்கு திறமையாக இருக்கிறோம்: இந்தியா போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் கருத்து

    • எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
    • நாங்கள் எங்களுடைய திட்டங்களை வெளிப்படுத்த முடியும் என்றால் வெற்றி நிச்சயம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் போட்டியில் ஓமன் அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    பாகிஸ்தான் நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-

    நாங்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றால், எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் திறமை எங்களிடம் உள்ளது.

    எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓமனுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள்.

    நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மூன்று பேரும் மாறுபட்ட ஸ்பின்னர்கள். நாங்கள் சைம் என்பவரையும் கொணடுள்ளோம். இவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் என வரும்போது, ஏராளமான ஸ்பின்னர்கள் தேவை.

    இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.

    Next Story
    ×