என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: சூர்யகுமாரிடம் கை குலுக்காமல் சென்ற பாகிஸ்தான் கேப்டன்.. அப்புறம் நடந்தது என்ன?
    X

    வீடியோ: சூர்யகுமாரிடம் கை குலுக்காமல் சென்ற பாகிஸ்தான் கேப்டன்.. அப்புறம் நடந்தது என்ன?

    • ஆசிய கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
    • சூர்ய குமார் யாதவ் மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.

    அபுதாபி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்பட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 94 ரன் வித்தியாசத்தில் ஆங்காங்கை வீழ்த்தியது.

    முன்னதாக இந்தப் போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.

    நிருபர்கள் சந்திப்புக்கு பிறகு ஒவ்வொரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்ள வேண்டும். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்கல் வரை காத்திருக்காமல் வெளியேறினார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோ வெளியானது.

    இந்தப் போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதும் ஆட்டம் துபாயில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. எல்லையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.

    அதே நேரத்தில் சூர்ய குமார் யாதவ் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் உள்ளிட்ட மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.

    பின்னர் தான் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்ற தவறை உணர்ந்தார். இதை தொடர்ந்து அவர் சூர்யகுமார் யாதவிடம் சென்று கை குலுக்கி கொண்டார். இந்த புதிய வீடியோவும் வெளியானது. இதேபோல சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியுடன் கை குலுக்கி கொண்டார்.

    Next Story
    ×