என் மலர்tooltip icon

    இந்தியா

    இஸ்ரேலை தாக்குதலுக்கு தூண்டும் வகையில் ஈரான் செய்தது என்ன?- உமர் அப்துல்லா கேள்வி
    X

    இஸ்ரேலை தாக்குதலுக்கு தூண்டும் வகையில் ஈரான் செய்தது என்ன?- உமர் அப்துல்லா கேள்வி

    • சண்டை எங்கே நடந்தாலும் அது நல்லது அல்ல.
    • சண்டை விரைவில் முடிவுக்கு வந்தால், சிறந்ததாக இருக்கும்.

    இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை 8 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய ஈரான், இன்று கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    அதேவேளையில் அணுஉலை இருக்கும் இடங்கள், அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ள இடங்களை குறிவைத்து ஈரான் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உமர் அப்துல்லா பதில் கூறுகையில் "இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை நல்ல விசயம் அல்ல. சண்டை எங்கே நடந்தாலும் அது நல்லது அல்ல. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தள்ளப்பட்டதற்கு, ஈரான் செய்தது என்ன?. இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வந்தால், சிறந்ததாக இருக்கும்.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறைத் தலைவர், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு அருகில் இல்லை என்றார். அப்போது அதுதான் ஆதாரம். இப்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல் திடீரென ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 90 மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். 400 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார்.

    Next Story
    ×