என் மலர்
நீங்கள் தேடியது "ஐஷ்வர்யா ராய்"
பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது பிரபல தன்மை உரிமைகள் (Publicity & Personality Rights) காப்பதற்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான, அவதூறான காட்சிகள் அனுமதியின்றி பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி (Aishwarya-வுக்கு சார்பாக) நீதிமன்றத்தில் வாதாடியதாவது:
"ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை."
"முழுமையாக போலியாக உருவாக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன."
"ஒருவர், என் வாடிக்கையாளர் பெயர் மற்றும் முகத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார். கூடுதலாக, இவை சிலர் தங்களது பாலியல் ஆசையைத் திருப்தி செய்ய பயன்படுத்துகின்றனர். இது மிகுந்த மோசமானது."
இதற்கு பதிலளித்த நீதி. தேஜஸ் காரியா,
"அனுமதியின்றி ஐஸ்வர்யா ராய் பச்சனின் படங்கள் அல்லது உருவம் பயன்படுத்தும் இணைய தளங்களுக்கும், தனிநபர்களுக்கும் தடை விதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.
- மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
சீதா பயணம் படத்தில் மேலும் பிரகாஷ் ராஜ் , சத்யராஜ், கோவை சரளா மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தில் கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
- அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம். இப்படத்தில் ஐஷ்வர்யா ராய், தபு, மமூட்டி மற்றும் அபாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலகளும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்று வரை அப்படத்தின் பாடல்கள் ரீல்ஸ்-இல் வலம்வருகிறது.
திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை படக்குழு ரீரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
With his gracious smile and charm, our #PonniyinSelvan @actor_jayamravi is at the #PS2AudioLaunch#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #PS2Trailer #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/SzYDP3DmMt
— Lyca Productions (@LycaProductions) March 29, 2023
- ‘தக்லைப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
- இப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையடுத்து மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், மணிரத்னம் தயாரித்து இயக்கும் இந்த படம் இந்தியில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி திரையுலகின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் இருவரும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
குரு படத்தில் நடிக்கும்போது ஐஷ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே காதல் மலர்ந்தது தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டால், அபிஷேக்-ஐஸ்வர்யாராய் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இந்த தகவல் உண்மையாக இருந்தால் அபிஷேக் மற்றும் ஐஷ்வர்யா மணி ரத்னம் இயக்கத்தில் இணையும் மூன்றாவது திரைப்படமாக அமையும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






